நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் – வேதாத்திரி மகரிஷி
ஒருநாள் ஒரு பெண்மணி சுவாமிஜியைப் பார்க்க வந்தார். அவர் தன் கணவர் மீது மிகுந்த மனக்குறை இருப்பதாகக் கூறினார். “என்னம்மா உன்குறை?” என்று மகரிஷி கேட்கிறார்கள். அதற்கு அந்தப் பெண், “என் கணவர் என்னை மிகவும் உதாசீனப்படுத்துகிறார். என்னை மதிப்பதில்லை. என்னிடம் எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை. அதனால் வரவர எனக்கு இல்வாழ்க்கையே வெறுப்பாகிவிட்டது சுவாமிஜி” என்கிறார். சுவாமிஜி அந்தப் பெண்ணிடம், “அம்மா, உங்கள் கணவர் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்திருக்கிறாரா? அதை நினைவுபடுத்திக் கூற முடியுமா?” என்றார்கள்.…