Does your work fit our scope?உங்கள் ஆய்வு எங்கள் எல்லைக்குள் வருகிறதா?
If you are unsure, send the editors a short summary before you submit.
ஐயம் இருந்தால், சமர்ப்பிக்கும் முன் இதழாசிரியர்களுக்கு ஒரு சிறு சுருக்கத்தை அனுப்புங்கள்.
Aathiyoga Indian Journal of Ancient Medicine and Yoga
ISSN : 3048-9822 (Online)
Aathiyoga publishes evidence-based research on yoga and India’s traditional systems of medicine, from their classical texts to clinical practice today.
யோகா, இந்திய மரபு மருத்துவ முறைகள் பற்றிய – மூல நூல்கள் முதல் இன்றைய மருத்துவ நடைமுறை வரை – சான்றுகளின் அடிப்படையிலான ஆய்வுகளை ஆதியோகா வெளியிடுகிறது.
Aathiyoga welcomes rigorous work from researchers and practitioners in any discipline, as long as it is original, ethically conducted and relevant to yoga or traditional medicine.
ஆய்வு அசலானதாகவும், அறநெறிப்படி நடத்தப்பட்டதாகவும், யோகா அல்லது மரபு மருத்துவத்துக்குத் தொடர்புடையதாகவும் இருந்தால், எத்துறை ஆய்வாளர், மருத்துவரின் தரமான படைப்பையும் ஆதியோகா வரவேற்கிறது.
Allied work in the health and life sciences is welcome when it concerns yoga or traditional systems of medicine.
யோகா அல்லது மரபு மருத்துவ முறைகளுடன் தொடர்புடைய நலவியல், உயிரியல் ஆய்வுகளும் வரவேற்கப்படுகின்றன.
Yoga practice and yoga therapy – āsana, prāṇāyāma, meditation and relaxation – in health, disease and rehabilitation, and the training of yoga teachers and therapists.நலவாழ்விலும் நோயிலும் மறுவாழ்விலும் யோகப் பயிற்சியும் யோக சிகிச்சையும் – ஆசனம், பிராணாயாமம், தியானம், தளர்வுப் பயிற்சிகள் – யோகா ஆசிரியர்கள், சிகிச்சையாளர்களின் பயிற்சி.
The principles of Ayurveda, its diagnosis and treatment, classical and proprietary formulations, pañcakarma, diet and daily regimen, and their clinical evaluation.ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நோயறிதலும் சிகிச்சையும், மரபு மற்றும் தனியுரிம மருந்துச் சேர்க்கைகள், பஞ்சகர்மா, உணவு, அன்றாட ஒழுக்கம், அவற்றின் மருத்துவ மதிப்பீடு.
Siddha theory and diagnosis, herbal, mineral and herbo-mineral medicines, varmam and external therapies, and the Siddha literature in Tamil.சித்த மருத்துவக் கோட்பாடும் நோயறிதலும், மூலிகை, தாது, மூலிகை-தாது மருந்துகள், வர்மமும் புறச் சிகிச்சைகளும், தமிழில் உள்ள சித்த மருத்துவ இலக்கியம்.
Medicinal plants and their identification, phytochemistry and pharmacology, standardisation and quality control of traditional medicines, and their safety.மூலிகைகளும் அவற்றை அடையாளம் காணுதலும், தாவர வேதியியல், மருந்தியல், மரபு மருந்துகளின் தரப்படுத்தலும் தரக் கட்டுப்பாடும், அவற்றின் பாதுகாப்பு.
The physiology and psychology of yoga and meditation, randomised and observational studies, case series, and research on how traditional treatments work.யோகா, தியானம் ஆகியவற்றின் உடலியங்கியலும் உளவியலும், சமவாய்ப்பு மற்றும் கவனிப்பு ஆய்வுகள், நோயாளர் தொடர்கள், மரபு சிகிச்சைகள் செயல்படும் விதம் பற்றிய ஆய்வுகள்.
Naturopathy, Unani, Sowa-Rigpa and homoeopathy in India, folk and tribal medicine, and the knowledge of traditional healers.இந்தியாவில் இயற்கை மருத்துவம், யுனானி, சோவா-ரிக்பா, ஹோமியோபதி, நாட்டுப்புற, பழங்குடி மருத்துவம், மரபு மருத்துவர்களின் அறிவு.
Classical texts of yoga and medicine in Sanskrit and Tamil, manuscripts and their editing, the philosophy of yoga, and the history of Indian medicine.வடமொழியிலும் தமிழிலும் உள்ள யோக, மருத்துவ மூல நூல்கள், ஓலைச்சுவடிகளும் அவற்றின் பதிப்பும், யோக மெய்யியல், இந்திய மருத்துவ வரலாறு.
Lifestyle medicine and prevention, community and workplace programmes, integrative care in hospitals, and health policy for traditional systems of medicine.வாழ்க்கை முறை மருத்துவமும் நோய்த் தடுப்பும், சமூக, பணியிட நலத் திட்டங்கள், மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த மருத்துவம், மரபு மருத்துவ முறைகளுக்கான சுகாதாரக் கொள்கை.
We do not publish personal testimonials or promotional material for products, clinics or courses; claims of cures without evidence; studies on people or animals without ethics approval and consent; or work already published in full elsewhere, including in seminar proceedings.
தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகள், பொருள்கள், மருத்துவமனைகள், பயிற்சிகள் பற்றிய விளம்பரப் படைப்புகள்; சான்றில்லாத குணப்படுத்தல் கூற்றுகள்; அறநெறி ஒப்புதலும் இசைவும் இல்லாமல் மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது நடத்திய ஆய்வுகள்; கருத்தரங்க மலர் உட்பட வேறிடங்களில் முழுமையாக ஏற்கெனவே வெளியானவை – இவற்றை நாங்கள் வெளியிடுவதில்லை.
Teachers, researchers and students of yoga, Ayurveda, Siddha and the health sciences in universities, colleges and research institutes; physicians and therapists in hospitals and wellness centres; yoga teachers, practitioners of traditional medicine, librarians and general readers interested in health.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்களில் யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நலவியல் அறிவியல் பயிலும், கற்பிக்கும், ஆய்வு செய்யும் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்; மருத்துவமனைகளிலும் நல்வாழ்வு மையங்களிலும் பணியாற்றும் மருத்துவர்கள், சிகிச்சையாளர்கள்; யோகா ஆசிரியர்கள், மரபு மருத்துவர்கள், நூலகர்கள், நலவாழ்வில் ஆர்வமுள்ள பொது வாசகர்கள்.
If you are unsure, send the editors a short summary before you submit.
ஐயம் இருந்தால், சமர்ப்பிக்கும் முன் இதழாசிரியர்களுக்கு ஒரு சிறு சுருக்கத்தை அனுப்புங்கள்.