e-ISSN 3048-9822DOI prefixDOI முன்னொட்டு 10.63300

Open Access · Double-blind peer review · APC ₹1,000 after acceptanceதிறந்த அணுகல் · இரட்டை மறைவு மதிப்பாய்வு · ஏற்கப்பட்ட பின் APC ₹1,000

Journal policy · Aathiyogaஇதழ் நெறிமுறை · ஆதியோகா

Publication Ethics and Malpractice Statementவெளியீட்டு அறநெறி

Aathiyoga follows the guidelines and Core Practices of the Committee on Publication Ethics (COPE).

ஆதியோகா வெளியீட்டு அறநெறிக் குழுவின் (COPE) வழிகாட்டுதல்களையும் அடிப்படை நடைமுறைகளையும் பின்பற்றுகிறது.

Our commitmentஎங்கள் உறுதிப்பாடு

Aathiyoga follows the Core Practices of the Committee on Publication Ethics (COPE) and the Principles of Transparency and Best Practice in Scholarly Publishing. This statement sets out the duties of everyone involved in publishing in the journal. Specific policies are linked at the end.

ஆதியோகா வெளியீட்டு அறநெறிக் குழுவின் (COPE) அடிப்படை நடைமுறைகளையும், ஆய்வு வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நடைமுறைக் கொள்கைகளையும் பின்பற்றுகிறது. இதழின் வெளியீட்டுப் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரின் கடமைகளையும் இவ்வறிக்கை விளக்குகிறது. குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கான இணைப்புகள் இறுதியில் உள்ளன.

Duties of editorsஇதழாசிரியர்களின் கடமைகள்

  • Evaluate manuscripts on academic merit alone, regardless of the authors’ identity, institution, nationality, gender, religion or beliefs.
  • Keep submissions confidential and share them only with the reviewers and editors involved.
  • Declare conflicts of interest and step aside from affected papers, including their own submissions.
  • Act on suspected misconduct following the COPE flowcharts, and publish corrections, expressions of concern or retractions when needed.
  • ஆசிரியர்களின் அடையாளம், நிறுவனம், நாடு, பாலினம், சமயம், நம்பிக்கை எதையும் பொருட்படுத்தாமல், கல்விசார் தகுதியின் அடிப்படையில் மட்டுமே கட்டுரைகளை மதிப்பிடுதல்.
  • சமர்ப்பிப்புகளை இரகசியமாக வைத்து, தொடர்புடைய மதிப்பாய்வாளர்களுடனும் இதழாசிரியர்களுடனும் மட்டுமே பகிர்தல்.
  • முரண்படும் நலன்களை அறிவித்து, தங்கள் சொந்தக் கட்டுரைகள் உட்படத் தொடர்புடைய கட்டுரைகளிலிருந்து விலகியிருத்தல்.
  • முறைகேடு ஐயம் எழுந்தால் COPE வழிமுறை வரைபடங்களின்படி நடவடிக்கை எடுத்து, தேவைப்படும்போது திருத்தம், கவலை அறிவிப்பு அல்லது திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிடுதல்.

Duties of reviewersமதிப்பாய்வாளர்களின் கடமைகள்

  • Provide objective, constructive and timely reports, normally within three weeks.
  • Point out relevant published work the authors have not cited, and any suspected overlap with other publications.
  • Keep the manuscript confidential and do not use unpublished material from it in their own work or upload it to AI tools.
  • Declare conflicts of interest and decline if they cannot be impartial.
  • புறநிலையான, ஆக்கபூர்வமான அறிக்கைகளைக் குறித்த காலத்தில், பொதுவாக மூன்று வாரங்களுக்குள், வழங்குதல்.
  • ஆசிரியர்கள் சுட்டாத தொடர்புடைய வெளியீடுகளையும், பிற வெளியீடுகளுடன் ஐயத்துக்குரிய ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டுதல்.
  • கட்டுரையை இரகசியமாக வைத்திருத்தல்; அதிலுள்ள வெளியிடப்படாத பகுதிகளைத் தங்கள் ஆய்வில் பயன்படுத்தாதிருத்தல்; செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றாதிருத்தல்.
  • முரண்படும் நலன்களை அறிவித்தல்; நடுநிலையாக இருக்க இயலாவிடில் மறுத்தல்.

Duties of authorsஆசிரியர்களின் கடமைகள்

  • Submit original work that has not been published and is not under consideration elsewhere, in any language.
  • Acknowledge all sources, and list as co-authors everyone who made a substantial contribution – and only them.
  • Obtain ethics committee approval and informed consent for research with human participants, and state this in the paper.
  • Disclose funding and any conflicts of interest, and describe any use of AI tools.
  • Report errors found in their published work promptly to the editor and cooperate in correcting it.
  • எந்த மொழியிலும் வெளியாகாத, வேறெங்கும் பரிசீலனையில் இல்லாத சொந்தப் படைப்பைச் சமர்ப்பித்தல்.
  • அனைத்து மூலங்களையும் சுட்டுதல்; கணிசமான பங்களிப்பு செய்த அனைவரையும் – அவர்களை மட்டுமே – இணை ஆசிரியர்களாகக் குறிப்பிடுதல்.
  • மனிதர்கள் பங்கேற்கும் ஆய்வுகளுக்கு அறநெறிக் குழு ஒப்புதலும் தகவலறிந்த இசைவும் பெற்று, அதைக் கட்டுரையில் குறிப்பிடுதல்.
  • நிதியுதவியையும் முரண்படும் நலன்களையும் அறிவித்தல்; செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியிருந்தால் அதை விவரித்தல்.
  • வெளியான கட்டுரையில் பிழை கண்டால் உடனே இதழாசிரியருக்குத் தெரிவித்து, திருத்துவதில் ஒத்துழைத்தல்.

Duties of the publisherவெளியீட்டாளரின் கடமைகள்

The Department of Human Excellence, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi supports the editors’ independence, funds the journal together with the article processing charge, keeps payments separate from editorial decisions, maintains the journal’s platforms and records, and ensures that published content is preserved and that corrections and retractions are linked to the original articles.

மனித மாண்பியல் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி இதழாசிரியர்களின் தன்னாட்சியைப் பேணுகிறது; கட்டுரை வெளியீட்டுக் கட்டணத்துடன் சேர்ந்து இதழுக்கு நிதியளிக்கிறது; கட்டணங்களை வெளியீட்டு முடிவுகளிலிருந்து தனியே வைக்கிறது; இதழின் தளங்களையும் பதிவுகளையும் பராமரிக்கிறது; வெளியான உள்ளடக்கம் பாதுகாக்கப்படுவதையும், திருத்தங்களும் திரும்பப் பெறுதல்களும் மூலக் கட்டுரைகளுடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

Handling misconductமுறைகேடுகளைக் கையாளுதல்

Suspected plagiarism, data fabrication or falsification, duplicate publication, citation manipulation or authorship abuse is investigated following the COPE flowcharts. The authors are always given the chance to respond. Outcomes may include rejection, a correction, an expression of concern or a retraction; the journal may also inform the authors’ institution.

கருத்துத் திருட்டு, தரவுகளைப் புனைதல் அல்லது திரித்தல், இரட்டை வெளியீடு, மேற்கோள் கையாடல், ஆசிரியர் தகுதி முறைகேடு ஆகியவை ஐயப்படும்போது COPE வழிமுறை வரைபடங்களின்படி விசாரிக்கப்படும். ஆசிரியர்களுக்கு எப்போதும் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும். நிராகரிப்பு, திருத்தம், கவலை அறிவிப்பு அல்லது திரும்பப் பெறுதல் ஆகியவை விளைவுகளாக இருக்கலாம்; ஆசிரியர்களின் நிறுவனத்துக்கும் இதழ் தெரிவிக்கலாம்.

Related policiesதொடர்புடைய நெறிமுறைகள்

At a glanceஒரு பார்வையில்

Related policiesதொடர்புடைய நெறிமுறைகள்

Last reviewed: October 2026இறுதியாக மறுஆய்வு: அக்டோபர் 2026

Questions about our policies?எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளா?

Write to the editorial office at dlibrarian@ngmc.org.

ஆசிரியர் அலுவலகத்துக்கு dlibrarian@ngmc.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.