Still have a question?இன்னும் கேள்வி உள்ளதா?
Write to dlibrarian@ngmc.org and quote your article ID if you have one.
கட்டுரை எண் இருந்தால் அதைக் குறிப்பிட்டு dlibrarian@ngmc.org முகவரிக்கு எழுதுங்கள்.
Answers to the questions authors ask most often. If yours is not here, write to the editorial office.
கட்டுரையாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கான விடைகள். உங்கள் கேள்வி இங்கு இல்லையெனில், ஆசிரியர் அலுவலகத்துக்கு எழுதுங்கள்.
English or Tamil. Articles in Tamil also give the title, abstract and keywords in English.
ஆங்கிலம் அல்லது தமிழ். தமிழ்க் கட்டுரைகள் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்களை ஆங்கிலத்திலும் தர வேண்டும்.
Any Unicode Tamil font, for example Latha, Vijaya, Noto Sans Tamil or Mukta Malar. Text typed in older fonts such as Bamini or TSCII is converted to Unicode by the submission form, but check the preview before you submit.
லதா, விஜயா, நோட்டோ சான்ஸ் தமிழ், முக்தா மலர் போன்ற ஏதேனும் ஒருங்குறி (Unicode) எழுத்துரு. பாமினி, TSCII போன்ற பழைய எழுத்துருக்களில் தட்டச்சு செய்த உரையைச் சமர்ப்பிப்புப் படிவம் ஒருங்குறிக்கு மாற்றும்; ஆனால் சமர்ப்பிக்கும் முன் முன்னோட்டத்தைச் சரிபாருங்கள்.
Use the form on the Submit Manuscript page and upload your Word (.docx) file. You receive an e-mail with your article ID and a private link to follow the review.
“கட்டுரை சமர்ப்பிக்க” பக்கத்தில் உள்ள படிவத்தில் உங்கள் வேர்டு (.docx) கோப்பைப் பதிவேற்றுங்கள். கட்டுரை எண்ணும் மதிப்பாய்வைப் பின்தொடரும் தனிப்பட்ட இணைப்பும் மின்னஞ்சலில் வரும்.
Yes, if it has not been published in full in the seminar proceedings or elsewhere. Mention the earlier presentation in your message to the editor.
ஆம், அது கருத்தரங்க மலரிலோ வேறு எங்குமோ முழுமையாக வெளியாகாமல் இருந்தால். முன்பு வாசித்த விவரத்தை இதழாசிரியருக்கான குறிப்பில் தெரிவியுங்கள்.
No. Publishing the same work twice in two languages is duplicate publication. You may cite your earlier work and build on it.
இல்லை. ஒரே ஆய்வை இரு மொழிகளில் இருமுறை வெளியிடுவது இரட்டை வெளியீடு ஆகும். உங்கள் முந்தைய ஆய்வைச் சுட்டி, அதன் தொடர்ச்சியாக எழுதலாம்.
Most authors receive a first decision within 4–6 weeks of submission, depending on the reviewers’ availability. Every research article is read by at least 2 reviewers who do not know who wrote it.
மதிப்பாய்வாளர்களின் நேரத்தைப் பொறுத்து, பெரும்பாலானோருக்குச் சமர்ப்பித்த 4–6 வாரங்களுக்குள் முதல் முடிவு கிடைக்கும். ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையையும், எழுதியவர் யார் என்று அறியாத குறைந்தது 2 மதிப்பாய்வாளர்கள் படிக்கின்றனர்.
The journal is published monthly. An accepted article appears in the next available issue once the licence agreement is signed, the APC is paid and the proof is approved.
இதழ் மாதந்தோறும் வெளிவருகிறது. உரிம ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, வெளியீட்டுக் கட்டணம் செலுத்தி, அச்சுப்படிக்கு ஒப்புதல் அளித்ததும், ஏற்கப்பட்ட கட்டுரை அடுத்து வரும் இதழில் வெளியாகும்.
Yes. Every published article receives a Crossref DOI with the prefix 10.63300 and a permanent page on the journal platform.
ஆம். வெளியாகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் 10.63300 முன்னொட்டுடன் Crossref DOI-யும், இதழ்த் தளத்தில் நிலையான பக்கமும் வழங்கப்படும்.
Open the private link from your e-mail, or enter your article ID and an author’s e-mail address on the Track Article page.
மின்னஞ்சலில் வந்த தனிப்பட்ட இணைப்பைத் திறங்கள், அல்லது “கட்டுரையின் நிலை அறிய” பக்கத்தில் கட்டுரை எண்ணையும் ஆசிரியர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடுங்கள்.
You do. Authors keep the copyright and publish under the Creative Commons Attribution 4.0 International licence (CC BY 4.0).
உங்களுக்கே. பதிப்புரிமை ஆசிரியர்களிடமே இருக்கும்; கட்டுரைகள் கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் 4.0 பன்னாட்டு (CC BY 4.0) உரிமத்தில் வெளியாகும்.
Only after acceptance. Submission, editorial processing and peer review are free. When an article is accepted, an article processing charge (APC) of ₹1,000 is payable; it covers online publication, DOI registration and e-certificates for all authors. Reading and downloading articles is free.
ஏற்கப்பட்ட பின் மட்டுமே. சமர்ப்பிப்பு, இதழாசிரியர் பரிசீலனை, மதிப்பாய்வு ஆகியவை இலவசம். கட்டுரை ஏற்கப்பட்டதும் ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் (APC) செலுத்த வேண்டும்; இது இணைய வெளியீடு, DOI பதிவு, அனைத்து ஆசிரியர்களுக்குமான மின்-சான்றிதழ்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. கட்டுரைகளைப் படிப்பதும் பதிவிறக்குவதும் இலவசம்.
After acceptance, open your article tracking page: it shows the amount, a UPI QR code and the bank details. Pay by UPI or bank transfer, from the article's tracking page after acceptance, then send the transaction reference (UTR) and a screenshot from the same page.
ஏற்கப்பட்ட பின் உங்கள் கட்டுரைக் கண்காணிப்புப் பக்கத்தைத் திறங்கள்: தொகை, UPI QR குறியீடு, வங்கி விவரங்கள் அங்கே காட்டப்படும். ஏற்கப்பட்ட பின், கட்டுரையின் கண்காணிப்புப் பக்கத்திலிருந்தே UPI அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் செலுத்தி, அதே பக்கத்தில் பரிவர்த்தனை எண்ணையும் (UTR) திரைப்பிடிப்பையும் அனுப்புங்கள்.
Yes. When the issue is published, e-certificates for every author of the article are e-mailed to the corresponding author; they are part of the APC. Each certificate has a number and a QR code, so anyone can check it on the Download Certificate page.
ஆம். இதழ் வெளியானதும், கட்டுரையின் அனைத்து ஆசிரியர்களுக்குமான மின்-சான்றிதழ்கள் தொடர்பு ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்; அவை வெளியீட்டுக் கட்டணத்தில் அடங்கும். ஒவ்வொரு சான்றிதழிலும் எண்ணும் QR குறியீடும் உண்டு; “சான்றிதழ்” பக்கத்தில் யாரும் சரிபார்க்கலாம்.
Write to dlibrarian@ngmc.org and quote your article ID if you have one.
கட்டுரை எண் இருந்தால் அதைக் குறிப்பிட்டு dlibrarian@ngmc.org முகவரிக்கு எழுதுங்கள்.