அறிவும் புலன்களும்
மனிதன் இவ்வுலகில் பிறந்து வாழ்வதன் நோக்கமே தன்னையும் இவ்வுலகையும் இயக்கிக்கொண்டிருக்கும் பரம்பொருளை உணர்ந்து அதோடு இரண்டறக் கலப்பதே ஆகும். ஆனால், அவன் தன் அறிவின் ஆற்றலை உணராமல், புலன்களின் வழியே பெறும் இன்ப துன்பங்களிலேயே மூழ்கித் திளைக்கிறான். மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மேம்பட்ட அறிவைப் பெற்றிருந்தும், அதை முறையாகப் பயன்படுத்தாமல், மாயையின் பிடியில் சிக்கித் தனது ஆன்மாவின் தூய்மையைக் கெடுத்துக் கொள்கிறான். இதனை உணர்ந்து, ஐம்புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அறிவை விழிப்படையச் செய்து, பரம்பொருளை அடையும் மார்க்கத்தை…