e-ISSN 3048-9822DOI prefixDOI முன்னொட்டு 10.63300
Open Access · Double-blind peer review · APC ₹1,000 after acceptanceதிறந்த அணுகல் · இரட்டை மறைவு மதிப்பாய்வு · ஏற்கப்பட்ட பின் APC ₹1,000
How to prepare your manuscript for Aathiyoga. Following these guidelines speeds up review and publication.
ஆதியோகா இதழுக்குக் கட்டுரையைத் தயாரிக்கும் முறை. இவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் மதிப்பாய்வும் வெளியீடும் விரைவாகும்.
Original research articles, review articles, short communications, case reports, perspectives, book reviews and letters to the editor. See Aims and scope for the subjects we publish.
அசல் ஆய்வுக் கட்டுரைகள், மீளாய்வுக் கட்டுரைகள், சுருக்க ஆய்வுக் குறிப்புகள், நோயாளர் நிகழ்வு அறிக்கைகள், கண்ணோட்டக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், ஆசிரியருக்குக் கடிதங்கள். வெளியிடும் துறைகளுக்குக் காண்க: நோக்கமும் எல்லையும்.
Manuscripts may be written in English or Tamil. The title, abstract and keywords must always be given in English (and in Tamil too for Tamil articles). Please type Tamil in a Unicode font; text in older fonts such as Bamini or TSCII is converted to Unicode by the submission system, but please check the preview.
கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதலாம். தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள் எப்போதும் ஆங்கிலத்தில் தரப்பட வேண்டும் (தமிழ்க் கட்டுரைகளுக்குத் தமிழிலும்). தமிழை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்யுங்கள்; பாமினி, TSCII போன்ற பழைய எழுத்துருக்களில் உள்ள உரையைச் சமர்ப்பிப்பு அமைப்பு ஒருங்குறிக்கு மாற்றும் – ஆனால் முன்னோட்டத்தைச் சரிபாருங்கள்.
Remove names, affiliations, acknowledgements and self-identifying references from the main manuscript, and clear the author name from the file properties. Cite your own earlier work in the third person.
முதன்மைக் கட்டுரையிலிருந்து பெயர்கள், பணியிடங்கள், நன்றியுரை, உங்களை அடையாளம் காட்டும் மேற்கோள்களை நீக்குங்கள்; கோப்பின் பண்புகளிலிருந்தும் ஆசிரியர் பெயரை நீக்குங்கள். உங்கள் முந்தைய ஆய்வுகளைப் படர்க்கையில் சுட்டுங்கள்.
Clinical and intervention studies must report approval from an institutional ethics committee (with approval number and date) and informed consent. Clinical trials should be registered, for example with the Clinical Trials Registry – India (CTRI), and reported following a relevant guideline such as CONSORT. Read the ethics approval and consent policy and the publication ethics statement.
மருத்துவ மற்றும் தலையீட்டு ஆய்வுகள், நிறுவன அறநெறிக் குழுவின் ஒப்புதலையும் (ஒப்புதல் எண், நாளுடன்) தகவலறிந்த ஒப்புதலையும் குறிப்பிட வேண்டும். மருத்துவச் சோதனைகள் இந்திய மருத்துவச் சோதனைப் பதிவகத்தில் (CTRI) போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டு, CONSORT போன்ற வழிகாட்டுதலின்படி அறிக்கையிடப்பட வேண்டும். காண்க: அறநெறி ஒப்புதல் கொள்கை, வெளியீட்டு அறநெறி அறிக்கை.
Authors keep the copyright and grant the journal a non-exclusive licence to publish. Articles are published under Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0). After acceptance, the corresponding author signs the copyright and licence agreement online from the manuscript tracking page. See Copyright and licensing.
பதிப்புரிமை ஆசிரியர்களிடமே இருக்கும்; வெளியிடுவதற்கான தனியுரிமையற்ற உரிமத்தை இதழுக்கு வழங்குவர். கட்டுரைகள் கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் 4.0 பன்னாட்டு (CC BY 4.0) உரிமத்தில் வெளியாகும். ஏற்கப்பட்ட பின், கட்டுரைக் கண்காணிப்புப் பக்கத்திலேயே தொடர்பு ஆசிரியர் பதிப்புரிமை மற்றும் உரிம ஒப்பந்தத்தில் இணைய வழியில் கையொப்பமிடுவார். காண்க: பதிப்புரிமையும் உரிமமும்.
Before peer review starts, authors may withdraw a manuscript by writing to the editor. After review has started, or once the paper is accepted, withdrawal needs a written reason and the editor’s approval. Published articles are not withdrawn; they may be corrected or retracted under the corrections and retractions policy.
மதிப்பாய்வு தொடங்கும் முன், ஆசிரியருக்கு எழுதிக் கட்டுரையைத் திரும்பப் பெறலாம். மதிப்பாய்வு தொடங்கிய பின்னரோ ஏற்கப்பட்ட பின்னரோ, எழுத்து மூலமான காரணமும் ஆசிரியரின் ஒப்புதலும் தேவை. வெளியான கட்டுரைகள் நீக்கப்படுவதில்லை; திருத்தம், திரும்பப் பெறுதல் கொள்கை படி திருத்தப்படலாம் அல்லது திரும்பப் பெறப்படலாம்.
There is no submission fee. After acceptance, an article processing charge (APC) of ₹1,000 is payable from the manuscript tracking page, by UPI or bank transfer. There are no page or colour charges, and authors who cannot pay may ask for a waiver. See Publication fees.
சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை. கட்டுரை ஏற்கப்பட்ட பின், ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணத்தை (APC) கட்டுரைக் கண்காணிப்புப் பக்கத்திலிருந்து UPI அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் செலுத்தலாம். பக்கக் கட்டணமோ வண்ணக் கட்டணமோ இல்லை; செலுத்த இயலாதவர்கள் கட்டண விலக்கு கோரலாம். காண்க: வெளியீட்டுக் கட்டணம்.
Yes, if it has not been published in full in proceedings. Tell the editor about the earlier presentation in your cover message.
ஆம், அது கருத்தரங்க மலரில் முழுமையாக வெளியாகாமல் இருந்தால். முன்பு வாசித்த விவரத்தை இதழாசிரியருக்கான குறிப்பில் தெரிவியுங்கள்.
No. Publishing the same work twice in two languages is duplicate publication. You may cite and build on your earlier work.
இல்லை. ஒரே ஆய்வை இரு மொழிகளில் இருமுறை வெளியிடுவது இரட்டை வெளியீடு ஆகும். உங்கள் முந்தைய ஆய்வைச் சுட்டி, அதன் தொடர்ச்சியாக எழுதலாம்.
It is strongly recommended for every author and required for the corresponding author. Registration at orcid.org is free.
அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது; தொடர்பு ஆசிரியருக்குக் கட்டாயம். orcid.org தளத்தில் பதிவு இலவசம்.
By e-mail and on the tracking page. The editors may also contact the corresponding author on WhatsApp if a number was given with consent.
மின்னஞ்சல் மூலமும் கண்காணிப்புப் பக்கத்திலும் அறியலாம். இசைவுடன் எண் தரப்பட்டிருந்தால், இதழாசிரியர்கள் வாட்ஸ்அப் வழியாகவும் தொடர்புகொள்ளலாம்.